Video - Click here to watch
மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாயை மீட்டு இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வழங்கியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை இளைஞர் ஒருவர் நாயை தூக்கி அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-ஆவது மாடியில் இருந்து கீழே வீசுவதும், கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விடியோ நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விலங்குகள் ஆர்வலர்கள் இந்த விடியோவை வைத்து போலீஸில் புகார் தெரிவித்ததுடன், இந்த கொடூர செயலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயை துன்புறுத்தியதும், இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை அறிந்த இருவரும் தலைமறைவாகினர். இருவரையும் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே ஒரு வாரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் காட்சிக்கு பிறகு, நாய் என்னவானது எனும் தகவல் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தூக்கி வீசப்பட்டதில் நான்கு கால்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடிய நாயை மீட்டு இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
EmoticonEmoticon