நடிகர் சிம்புவுக்கு அம்மாவாக, நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளார். நடிகர் சிம்பு, மூன்று, 'கெட்டப்'களில் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்! ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வரும் இப்படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக மூன்று நாயகியர் நடிக்கின்றனர். முதலில், நடிகை த்ரிஷாவிடம், 'கால்ஷீட்' கேட்டார்
ஆதிக் ரவிச்சந்திரன். கதைப்படி சிம்புவுக்கு ஜோடியானாலும், மற்றொரு சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதை கேள்விப்பட்டு, த்ரிஷா விலகினார். தற்போது அந்த வேடத்தில், நடிகை ஸ்ரேயா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என எதிலும் வாய்ப்பில்லாமல் உள்ள ஸ்ரேயா, வந்த வாய்ப்பை தக்கவைக்க, உடனடியாக, 'ஓகே' சொல்லி விட்டார்.

EmoticonEmoticon