நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா சர்மா நடிப்பில் நாளை வெளிவரும் படம் சுல்தான். இருவரும் மல்யுத்த வீரர்-வீராங்கனையாக நடித்துள்ளனர். சல்மானுக்கு மல்யுத்த பயிற்சியாளராக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை இந்தியாவில் 4500 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 900 திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.
சல்மானின் சம்பளத் தொகையைத் தவிர 95 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படம் ரூ.235 கோடி வசூல் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வர்த்தக நிபுணரான அமுல் மோகன் இப்படத்திற்கு முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ரூ. 150 முதல் ரூ.160 கோடி வரை கிடைக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான சேட்டிலைட் உரிமையை சல்மான் கான் வாங்கியுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை தான் எடுத்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
இது படத்தைப் பற்றி சல்மான் தெரிந்துகொண்டு எடுத்த அதிரடி முடிவு. இந்தப் படம் வெற்றியா? தோல்வியா? என்பது பற்றி சல்மான் முதலிலேயே தெரிந்துகொண்டுள்ளார் போல. ஆமாம், சமீபத்தில் கூட இது பற்றி கருத்தும் தெரிவித்திருந்தார்.
அனுஷ்கா ஷர்மா தன் காதலர் விராட் கோஹ்லிக்கு தான் நடித்த சுல்தான் படத்தை சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டினார்

EmoticonEmoticon