ஆரோக்கியமான கூந்தல் இருந்தால், நம்மை அழகாக காட்டும். அழகான தோற்றமும் பெறுவோம்

அனைவருக்குமே தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் ஷாம்புக்கள் அனைத்தும் கெமிக்கல் அதிகம் கொண்டவை என்பது தெரியும். இருப்பினும் நம் தலைமுடியில் இருக்கும் அழுக்குகளைப் போக்க ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதே என்று நிறைய பேர் ஏதோ ஒரு ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் தலைமுடியின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஷாம்புக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரித்து, அவற்றைக் கொண்டு தலைமுடியை அலசினால், நிச்சயம் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமல்லாமல், நேச்சுரல் ஷாம்புக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களில் உள்ள உட்பொருட்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். சரி, இப்போது வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி பெற உதவும் நேச்சுரல் ஷாம்புக்களை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 

முட்டை ஷாம்பு :
ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தலைமுடியை நீரில் அலசிக் கொண்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, பின் ஷாம்பு பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
 * பின் 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, அந்நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

 பேக்கிங் சோடா ஷாம்பு : 
 * 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சுடுநீரில் கலந்து, பின் அதோடு, குளிர்ந்த நீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் ஈரமான தலைமுடியில் அந்த கலவையைக் கொண்டு தலையை மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 2 லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைமுடியை அலச வேண்டும்.


EmoticonEmoticon