சென்னை,
சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தான கோபாலகிருஷ்ணன். இவரது 2-வது மகள் சுவாதி (வயது24). இவர் செங்கல் பட்டு அருகே உள்ள மகேந் திரா சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நுங்கம்பாக்கத்தில் இருந்து மின்சார ரெயிலில் பரனூருக்கு தினமும் அவர் பணிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். கடந்த 24-ந்தேதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு அவர் வந்தபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தான்.அடுத்த நிமிடம் அவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை 4 தடவை வெட்டினான். இதில் கழுத்து, தாடையில் கடுமையாக வெட்டு காயம் அடைந்த சுவாதி ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.
சுவாதி கொலை செய்யப் பட்ட விதம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. குறிப் பாக வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் இந்த கொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை பற்றி முதலில் ரெயில்வே போலீசார் துப்பு துலக்கினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.இதையடுத்து சுவாதி கொலை வழக்கை விசா ரிக்கும் பொறுப்பை சென்னை போலீசார் ஏற்றனர். 11 தனிப்படைகள் அமைக் கப்பட்டது. என்றாலும் குற்ற வாளியை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
கொலையாளி யார்? அவன் எதற்காக சுவாதியை கொலை செய்தான் என்பது கடந்த ஒரு வாரமாகவே மர்மமாக இருந்தது. இந்த கொலையில் போலீசாருக்கு துப்பு துலக்குவதற்கு நுங் கம்பாக்கம் ரெயில் நிலை யம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த கொலை யாளியின் படம் மட்டுமே உதவியாக இருந்தது.
அந்த படம் தெளிவில்லா மல் இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத் தில் அது துல்லியமாக மேம் படுத்தப்பட்டு படம் வெளி யிடப்பட்டது. அதற்கு உடன டியாக பலன் கிடைத்தது.
அந்த படத்தை பார்த்த சூளைமேட்டில் உள்ள ஒரு மேன்சன் (தங்கும்விடுதி) காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேன்சனில் தங்கி இருக்கும் ஒரு வாலிபர் போன்றே கொலையாளி இருப்பதாக அவர் உணர்ந் தார். அவர் நேற்று முன் தினம் இரவு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த காவலாளியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ராம்குமார் எங்கே என்று போலீசார் விசாரித்தனர்.அப்போது 24, 25-ந்தேதிகளில் அவன் மேன்சனில் தங்கி இருந்து இருக்கிறான். அதன் பிறகு அவன் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டது தெரிய வந்தது. இதனால் ராம்குமார் மீதான சந்தேகம் வலுத்தது. அவனது சொந்த ஊர் மற்றும் அவனை பற்றிய முழு விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.
ராம்குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பன்பொழி பகுதியில் உள்ள தென்பொத்தை, மீனாட்சிபுரம் என்ற சிறிய கிராமம் ஆகும். இதை அறிந்த தனிப்படை போலீசார் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமனுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. அந்த தனிப்படை போலீசார் நேற்று காலை முதல் மீனாட்சிபுரம் கிராமத் தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலையாளி ராம்குமார் வீட்டையும், அவன் எங்கே செல்கிறான் என்பதையும் ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணித் தனர்.
நேற்று காலை 10 மணியள வில் ராம்குமார் பக்கத்தில் உள்ள மலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றான். தனது வீட்டில் உள்ள ஆடுகளை அந்த பகுதிக்கு கொண்டு சென்றான். அவனை தனிப் படை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.தூரத்தில் இருந்தபடியே அவனை படம் பிடித்தனர். அந்த படம் சென்னையில் உள்ள தனிப்படை போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட் டது. ஏற்கனவே கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த படத்துடன் மீனாட்சிபுரத்தில் எடுக்கப்பட்ட கொலையாளியின் படத்தை தனிப்படை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது சுவாதியை கொன்றவன் இந்த ராம் குமார்தான் என்பது தனிப் படை போலீசாருக்கு 100 சதவீதம் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து ராம் குமாரை தப்பிக்க விடாமல் பிடிக்க வியூகம் வகுக்கப் பட்டது.
ராம்குமாரை எப்போது, எப்படி பிடிப்பது நேற்று மதி யம் நெல்லை போலீஸ் சூப் பிரண்டு விக்ரமன் தலைமை யில் போலீசார் ஆலோசனை நடத்தினார்கள். இதற்காக தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் புதிய தனிப்படை அமைக்கப் பட்டது.பகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தனிப்படை போலீசார் கருதினார்கள். எனவே நள்ளிரவில் அவனை தூக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி இரவு 11 மணிக்கு 3 போலீஸ் வேன் களில் போலீசார் மீனாட்சி புரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஒரு பிரிவு போலீசார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 போலீசார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர்.
.சரியாக இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டினார். ராம்குமாரின் தந்தை பரம சிவம் கதவை திறந்தார். போலீசாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
என்ன போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று அவர் பயத்தில் அலறினார். இதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்தான்.போலீசார் எப்படியோ தன்னை மோப்பம் பிடித்து சுற்றிவளைத்து விட்டார்களே என்ற அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடி னான். தப்பி செல்ல அவன் முயன்றான்.இன்ஸ்பெக்டர் பாலமுரு கன் அவனை பிடிக்க விரட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
இதற்கிடையே வீட்டின் பின்பகுதிக்கு ஓடிய ராம் குமார் வீட்டை சுற்றி போலீஸ் நிற்பதை அறிந்ததும் இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்தான். உடனே அவன் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றான். ரத்தம் பீறிட்டு வழிய அவன் அலறியபடி கீழே சாய்ந்தான். அதற்குள் போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். அவனை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவன் கழுத்தில் துணியால் கட்டினார்கள்.
பிறகு அவனை வேனில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு 11.30 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமா ருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் தெரிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
ராம்குமாரை காப்பாற்ற கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டதை உணர்ந்த போலீசார் அவனை தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த பாது காப்புடன் கொண்டு வந்தனர். அங்கு அவனுக்கு உடனடி யாக தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டது. இதற்காக இரவில் 5 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற அறுவை சிகிச்சையில் ஈடு பட்டனர்.
டாக்டர்கள் குழு இன்று அதிகாலை 3.15 மணிக்கு சிகிச்சை தொடங்கினார்கள். 5.15 மணி வரை 2 மணி நேரம் சிகிச்சை நீடித்தது. ராம்குமாரின் கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன.
அதன் பிறகு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் குழு கண் காணித்தது. இன்று காலை 7.30 மணிக்கு ராம்குமார் கண் விழித்தான். சுயநினைவு வந்தாலும் அவனால் முழுமையாக பேச முடியவில்லை. சுற்றி நின்ற போலீசாரை மிரட்சியுடன் பார்த்தான். பிறகு அவன் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.அடுத்தக் கட்டமாக அவனி டம் எப்போது விசாரணை நடத்துவது என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

EmoticonEmoticon