நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவம்: நடிகை த்ரிஷா காட்டம்!


அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் நாயை தூக்கி கீழே வீசுவதும், கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை பரவியது. ஒருவர் வீச, மற்றொருவர் படம் பிடித்துள்ளது தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தக் காட்சிக்கு பிறகு, நாய் என்னவானது எனும் தகவலும் தெரியவில்லை.
புகாரின்பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயை துன்புறுத்தியதும், இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்தது. விலங்குகள் நல தன்னார்வலர்கள் அந்த நாயைத் தற்போது பராமரித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா, ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.


EmoticonEmoticon