தென் ஆப்ரிக்கா, டான்சானியா, கென்யா, மொசம்பிக் ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக, டில்லி விமான நிலையத்திலிருந்து அவர் மொசம்பிக் நாட்டிற்கு தனி சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார்.
பிரதமர் மோடி நான்கு நாடுகள் பயணமாக டில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக மொசாம்பிக் தலைநகர் மபுடோ புறப்பட்டார். கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்ததக்கது. இன்றைய நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் பிளிபி நியூஸியை சந்திக்கும் மோடி, அந்நாட்டு பார்லிமென்டுக்கு செல்ல உள்ளார். மாலையில் இந்திய மாணவர்களை சந்திக்கும் மோடி, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழச்சியிலும் கலந்து கொள்கிறார்.

EmoticonEmoticon