கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் மாரடைப்பால் காலமானார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் நெஞ்சுவலி  ஏற்பட்டு மரணமடைந்தார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் நடைபெற்ற போது ரயில்நிலையத்தில் சுவாதியின் உடலை பார்த்த ஆதிகேசவன் என்பவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த அவரது மகன் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை சம்பவம் காரணமாக ரயில் நிலையம் பரபரப்பாக இருந்ததால் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஆதிகேசவனை யாரும்  கண்டுகொள்ளப்படவில்லை.
உயிருக்கு போராடிய தனது தந்தையை காப்பாற்ற ரயில்வே நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இறந்த ஆதிகேசவனின் மகன் கோதண்டரமன்  குற்றம்சாட்டியுள்ளார்.


EmoticonEmoticon