குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருவதால் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குதூகல குளியல் போட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், கடந்த 8–ம் தேதி சாரல் மழையுடன் சீசன் தொடங்கியது. அருவிகளில் குறைந்தளவு தண்ணீர் விழுந்தது. அடுத்த 2 நாட்களில் கனமழை கொட்டியதால், மெயின் அருவியில் தடுப்பைத் தாண்டி வெள்ளமாக தண்ணீர் கொட்டியது. நேற்று அதிகாலை முதல் சாரல் மழை விழுந்தது. இதமான காற்றும் வீசியதால் சீசன் களை கட்டியிருந்தது. மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகள் குவிந்திருந்து அருவிகளில் குதூகலக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
காலை 10 மணிக்கு மேல் குற்றாலத்தில் சற்று கனமழை பெய்தது. மெயின்
அருவியிலும், ஐந்தருவியிலும் வெள்ளமாக தண்ணீர் கொட்டத் தொடங்கியது. நேரம்
செல்லச் செல்ல தண்ணீரின் அளவு அதிகரித்து வந்தது. மதியம் 1 மணியளவில்
மெயின் அருவியில் தடுப்பின் மீது வெள்ளமாக தண்ணீர் கொட்டத் தொடங்கியது.
அதேசமயம், ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் விழுந்த போதிலும் சுற்றுலா
பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் குளிக்க முடியாமல்
ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குதூகல குளியல் போட்டு
மகிழ்ந்தனர்.

EmoticonEmoticon