புதுச்சேரி, காரைக்காலில் கள், மற்றும் சாராயக் கடைகளுக்கான ஆன்லைன் ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 98 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 16 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 80 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது.
காரைக்கால் பிராந்தியத்தில் 27 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 19 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 8 கடைகளுக்கு ஏலம் நடைபெறுகிறது.
கள்ளுக் கடைகள்
புதுச்சேரியில் மொத்தம் 69 கள்ளுக்கடைகள் உள்ளன. 22 கடைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 47 கடைகள் ஏலம் நடைபெறுகிறது.
காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 28 கள்ளுக்கடைகள் உள்ளன. 12 கடைகளின் உரிமங்கள் ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டன. மீதமுள்ள 16 கடைகளின் ஏலம் நடைபெறுகிறது. புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் 2016-17-ம் ஆண்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.
கடைகள் குத்தகை காலம் 3 ஆண்டுகளாகும். அதில் அதிகப்பட்சம் ஏலம் கேட்போருக்கு கள், சாராயக் கடைகள் ஒதுக்கப்படும்.
இந்த ஏலம் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கலால் துறை துணை ஆணையர் ஆபெல் ரொசாரிய தெரிவித்தார்.

EmoticonEmoticon