துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக தனது இரு மகன்களுடன் உயிர் தப்பினார் ஹிரித்திக் ரோஷன்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது மகன்கள் ஹ்ரேஹான், ஹரிதான் ஆகியோருடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று நாடு திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் பயணம் செய்யவிருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தார்கள்.
அப்போது, விமான நிலையத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 36 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்த ஹிரித்திக் மற்றும் அவரது மகன்கள் எந்த பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வேறு விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
நாடு திரும்பியதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்தான்புல் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

EmoticonEmoticon