நடிகை சமந்தாவுக்கு நிச்சயதார்த்தமா?


இந்த ஆண்டு வெளியான 'தெறி' மற்றும் '24' ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்த நடிகை சமந்தா சமீபகாலமாக புதிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. அவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலிப்பதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விமான நிலையம் ஒன்றில் ஜோடியாக சென்றது மட்டும் ஐதராபாத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் பால்கனியில் ஒன்றாக இருந்த வீடியோ ஆகியவை இவர்களுடைய காதலை உறுதிப்படுத்தியது.
 
மேலும் இருவீட்டார்களும் சமீபத்தில் சமந்தா-நாகசைதன்யா திருமணம் குறித்து பேசியதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாகசைதன்யா தற்போது நடித்து வரும் 'பிரேமம்' தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 
நடிகை சமந்தா தற்போது 'வடசென்னை' என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


EmoticonEmoticon