கோவாவில் விபச்சாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அரசியல்வாதிகளின் ஆதரவோடு நடக்கிறது: கேஜ்ரிவால்


கோவாவில் போதை மருந்து பயன்பாடு, விபச்சாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அரசியல்வாதிகளின் ஆதரவோடு நடப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால் கடலோர மாநிலங்களின் சிறிய ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா துறையினரிம் பேசும் போது கோவா சுற்றுலா என்றாலே, போதை மருந்துகள் மற்றும் விபச்சாரம் என்ற குற்றச்சாட்டு  உள்ளது. அரசியில்வாதிகளின் ஆதரவுடன் இது செயல்படுவதால் அவற்றை நிறுத்த முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது என கூறினார்.
கோவாவில் நடந்த 2வது கூட்டம் இது. வரும் 2017ம் ஆண்டு அங்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது. ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் கோவாவில் போதை ஒழிப்பு, விபச்சாரத் தடுப்பு குறித்து இடம்பெறும் என தெரிகிறது.


EmoticonEmoticon