இந்நிலையில் பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் சுவாதி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் இந்த கொலையை திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜாதிக்கட்சிகள் உள்பட யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதே சுவாதி ஒரு தலித் பெண்ணாக இருந்திருந்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டம் செய்திருப்பார்கள். மேலும் கொலையாளி பிலால் என்ற முஸ்லீம் என்றும் கூறப்படுகிறது' என்று சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளார்.
கொலை செய்தவர் யார் என்பதை இன்னும் போலீசார் கண்டுபிடிக்காத நிலையில் கொலையாளி முஸ்லீம் என்று கூறியதற்கும், திராவிட கட்சிகளை தாக்கி கருத்து தெரிவித்ததற்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மீது பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரா, 'இந்த விவகாரத்தில் நான் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன். அந்த முகநூல் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எனக்கு உடன்பாடு உண்டு. இதை சொல்ல எனக்கு உரிமையும் உண்டு என்று கூறியுள்ளார்


EmoticonEmoticon