திட்டமிட்டக் கொலை? சுவாதியை 2 வாரங்களுக்கும் மேல் பின் தொடர்ந்த குற்றவாளி


சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி, கொலை செய்ய திட்டமிட்டு 2 வாரங்களுக்கும் மேல் சுவாதியை பின்தொடர்ந்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சுவாதியின் நெருங்கிய தோழிகள் மூன்று பேர், சுவாதியை பின்தொடர்ந்த நபரைப் பார்த்திருப்பதாகக் கூறியதன் அடிப்படையில், அவரின் புகைப்படத்தை வரையும் பணிகள் துவங்கியுள்ளன.
மேலும், சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனம் அமைந்துள்ள பரனூரில் உள்ள மகிந்திரா வோர்ல்ட் சிட்டி நிறுவனத்துக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராவிலும், சுவாதியை பின்தொடர்ந்து செல்பவரின் காட்சிகள் பதிவாகியுள்ளது.
குறைந்தது 2 வாரங்களாவது குற்றவாளி, சுவாதியை பின்தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பூசாரியிடம் விசாரணை:
சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு சுவாதி, தனது வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது வலிய வந்து பேசிய இளைஞரிடம் சுவாதி பேசாமல் நழுவிச் சென்றுள்ளார். அந்த நபர், சுவாதியிடம் விடாமல் சென்று பேசினாராம். இந்தத் தகவலறிந்த போலீஸார், பூசாரியிடமும் அந்த நபர் குறித்த தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.


EmoticonEmoticon